close
Choose your channels

'தளபதி 67' படத்திற்கு முன்பே 2 படங்களில் கமிட் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67’ என்ற திரைப்படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது பார்த்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'தளபதி 67’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் இந்த பூஜையில் விஜய், அர்ஜூன், த்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 'தளபதி 67’ படத்தை இயக்கும் பணி ஒரு பக்கத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு படத்தில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தை ’ஆடை’ இயக்குனர் ரத்னகுமார் இயக்க இருப்பதாகவும் விக்ரம் நடிப்பில் உருவாக படத்தை தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரான மகேஷ் பாலசுப்பிரமணியம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தின் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தயாரிக்க இருக்கும் இரண்டு படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment