close
Choose your channels

நயன்தாரா பாணியில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமி ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடியுள்ள நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் ராஜலட்சுமி, நயன்தாரா பாணியில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ’லைசென்ஸ்’. இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ராதா ரவி உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராஜலட்சுமி தான் இந்த படத்தில் பாரதி என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு பிரச்சனை ஏற்படும் போது பொங்கி எழுந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும், அதுவும் அந்த பெண் ஆசிரியராக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் திரையில் பார்க்கலாம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘அறம்’ படத்தில் நடித்த நயன்தாராவின் கெட்டப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.