'96' ஜானு கேரக்டரில் அஜித் பட நாயகி

  • IndiaGlitz, [Tuesday,December 11 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. இந்த படத்தை பார்த்த பலர் தங்கள் குழந்தைகளுக்கு ராம், ஜானு என்று பெயர் வைப்பதாக கூட சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்தது. அந்த அளவுக்கு இந்த கேரக்டர்கள் மக்கள் மனதில் ஆழ பதிந்துவிட்டது

இந்த நிலையில் '96' திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தெலுங்கில் ராம் கேரக்டரில் கோபிசந்த்தும், ஜானு கேரக்டரில் த்ரிஷாவும் நடிக்கவுள்ளனர்.

அதேபோல் இந்த படத்தின் கன்னட ரீமேக் படமான '99' திரைப்படத்தில் ராம் கேரக்டரில் கணேஷ் என்ற நடிகர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜானு கேரக்டரில் நடிகை பாவனா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே அஜித் நடித்த 'அசல்', உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கணேஷ், பாவனா ஆகிய இருவரும் ஏற்கனவே 'ரோமியோ' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்தியன் 2' இசையமைப்பாளர்: உறுதி செய்த பேட்டி

ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் 14ஆம் தேதி முதல் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

நடன இயக்குனரை மணக்கும் 'பில்லா பாண்டி' நாயகி

ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் சாந்தினி தமிழரசன். இவர் ஏற்கனவே 'கவண்', 'கட்டாவை காணோம்', 'வில் அம்பு' உள்பட் பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல்: 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை

இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு முன்னோடி தேர்தலாக ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில்

அஜித்தின் 'அடிச்சு தூக்கி' தூக்கிய சாதனை

தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு பாடல் வெளியானது

அஜித் பாடலுக்காக கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் நேற்றிரவு 7 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே