close
Choose your channels

'இந்தியன் 2' இசையமைப்பாளர்: உறுதி செய்த பேட்டி

Tuesday, December 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

வித்தியாசமான வேடத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அனிருத் அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கிய ஒருசில படங்கள் தவிர பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இதுவரை இசையமைத்துள்ளார். ஆனால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.