close
Choose your channels

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிக்பாஸ் பங்கேற்பாளர்

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல போஜ்புரி நடிகர் நிராஹ், சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 6 சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறியவர். இவர் சமீபத்தில் லண்டனில் நடைபெறும் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொள்ள விமான சென்று கொண்டிருந்தபோது பணிப்பெண்ணிடம் குடிபோதையில் தவறான முறையில் நடக்க முயற்சித்துள்ளார். பணிப்பெண் எச்சரித்தும் மீண்டும் மீண்டும் நிராஹ் தொல்லை கொடுக்கவே அவர் தனது மேதிகாரியிடம் புகார் செய்தார்.

விமானத்தின் மேலதிகாரி நடிகர் நிராஹ் மன்னிப்பு கேட்காவிட்டால் விமானம் லண்டன் இறங்கியவுடன் போலீஸில் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரித்தவுடன் தான் நிராஹ் மன்னிப்பு கேட்டார். நிராஹின் அருவருப்பான செய்கையை சக பயணிகள் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.