ஓவியாவை பார்த்து ஷாக்கான பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியா தான். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் கூட அடுத்ததாகத்தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த அளவிற்கு ஓவியாவுக்கு இந்த நிகழ்ச்சியால் புகழ் கிடைத்தது. ஓவியா மட்டும் பாதியில் பிக்பாஸில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் அவர் தான் வின்னர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும் தங்களை அடுத்த ஓவியாவாக காட்டும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியாவிடம் உள்ள அந்த வெகுளித்தனம், உண்மை யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை என்பதே ரசிகர்களின் எண்ணம்

இந்த நிலையில் நேற்று 16 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டதும் இவர்களில் யாரும் யாரும் யாருக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை என்றே தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென ஓவியா பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் போட்டியாளர்கள் அனைவருக்கு அதிர்ச்சி. ஏனெனில் ஓவியா உள்ளே இருந்தபோது இப்போதைய போட்டியாளர்கள் வெளியே இருந்து அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவை நேரில் பார்த்தவர்கள் என்பதால் ஓவியாவின் எண்ட்ரி அனைவருக்கு ஷாக்காக இருந்தது. இதனால் பெயரளவிற்கு மட்டுமே அவரை வரவேற்றனர். ஓவியா போட்டியாளர் இல்லை வெறும் கெஸ்ட் தான் என்று தெரிந்தவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

More News

பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  2 நிகழ்ச்சி நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் நேற்று மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் 2: முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆர்மிகள்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர் படை , ஓவியா ஸ்வீட்ஸ் என ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில்

Mr. சந்திரமெளலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள Mr. சந்திரமெளலி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

பிக்பாஸ் 2: முதல் நாளிலேயே நான்கு பேர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சுமார் 4 மணி நேரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினரான

சல்மான்கானின் 'ரேஸ் 3' சென்னை ஓப்பனிங் வசூல் விபரம்

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் தினத்தில் சல்மான்கான் படம் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் அவர் நடித்த 'ரேஸ் 3' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.