close
Choose your channels

ஓவியாவை பார்த்து ஷாக்கான பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

Monday, June 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியா தான். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் கூட அடுத்ததாகத்தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த அளவிற்கு ஓவியாவுக்கு இந்த நிகழ்ச்சியால் புகழ் கிடைத்தது. ஓவியா மட்டும் பாதியில் பிக்பாஸில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் அவர் தான் வின்னர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும் தங்களை அடுத்த ஓவியாவாக காட்டும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியாவிடம் உள்ள அந்த வெகுளித்தனம், உண்மை யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை என்பதே ரசிகர்களின் எண்ணம்

இந்த நிலையில் நேற்று 16 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டதும் இவர்களில் யாரும் யாரும் யாருக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை என்றே தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென ஓவியா பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் போட்டியாளர்கள் அனைவருக்கு அதிர்ச்சி. ஏனெனில் ஓவியா உள்ளே இருந்தபோது இப்போதைய போட்டியாளர்கள் வெளியே இருந்து அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவை நேரில் பார்த்தவர்கள் என்பதால் ஓவியாவின் எண்ட்ரி அனைவருக்கு ஷாக்காக இருந்தது. இதனால் பெயரளவிற்கு மட்டுமே அவரை வரவேற்றனர். ஓவியா போட்டியாளர் இல்லை வெறும் கெஸ்ட் தான் என்று தெரிந்தவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.