close
Choose your channels

கிளாமர் நடனம்… ரசிகர்களை கிறங்க வைத்த பிக்பாஸ் நடிகையின் வைரல் வீடியோ!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷெரின். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு “விசில்“, “கோவில்பட்டி வீரலட்சுமி“ போன்ற ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதையடுத்து சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டுவரும் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் நடிகை ஷெரின் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தளத்தில் எப்போதுமே வேறலெவல் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சேலை அணிந்துகொண்டு நடிகை ஷெரின் ஸ்லோ மோஷனில் நடனம் ஆடியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படு தீயாய் பரவிவருகிறது.

தமிழைத்தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் கவனம் செலுத்திவரும் நடிகை ஷெரின் சமீபத்தில் “ரஜினி“ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் அவர் வெளியிட்டு இருக்கும் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.