நீங்க ஒரு காமெடியன் இல்லை, முழு கலைஞன்.. பிக்பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு காமெடியானாக நினைத்து கொண்டிருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு முழு கலைஞன் என பிக் பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய புரமோ வீடியோவில் அமுதவாணனுக்கு பிக்பாஸ் வாழ்த்து தெரிவிக்கின்றார்.
’இந்த வீட்டில் நீங்கள் வாழ்ந்த நாட்கள், செய்த டாஸ்குகள் ஆகியவை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பிக்பாஸ் தெரிவிக்கின்றார். அந்த ஏற்பாடுகளை பார்த்து ஆச்சரியம் அடைந்த அமுதவாணன் பொம்மையை பார்த்து ’ஆகா பொம்மை பொம்மை, இந்த வீடு இரண்டாகப் பிரிந்தது இந்த பொம்மையால் தான் என்று கூறுகிறார். அதை சகப் போட்டியாளர்கள் ஆமோதிக்கின்றனர்.
அப்போது பிக்பாஸ், ‘உங்கள் மனதில் வேண்டுமானால் நீங்கள் ஒரு காமெடியனாக நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் என் அமுதா ஒரு முழு கலைஞன் என்று கூறியதும், அமுதவாணன் நன்றி கூறுகிறார். இந்த வீடியோ அமுதவாணனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் இறுதி போட்டியாளராக அமுதவாணன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் வெல்வாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day102 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/iYxytEcApY
— Vijay Television (@vijaytelevision) January 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments