close
Choose your channels

விக்ரமனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டியாளர்.. வைரல் வீடியோ

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்பதையும் அவருக்கு பிக் பாஸ் கோப்பை மற்றும் 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த சீசனின் இரண்டாவது இடத்திற்கு விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்திற்கு ஷிவின் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் டைட்டில் பட்டதை வெல்லவில்லை என்றாலும் விக்ரமன் அதே புன்சிரிப்புடன் இருந்தார் என்பதை பார்க்க முடிந்தது. அது மட்டும் இன்றி அவர் சக போட்டியாளர்களிடம் எப்பொழுதும் போல் சிரித்த முகத்துடன் கள்ளங்கபடம் இல்லாமல் இருந்தது அவர் மக்கள் மனதை வென்றுவிட்டார் என்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில் ஏடிகே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வீடியோ கூறியபோது, ‘விக்ரமன்’ நல்ல நண்பர்’ என்று கூறினார். ஏடிகேவின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிற்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.