'உங்ககிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிக்கிறாங்க'.. ஏடிகே சொன்னது யாரை?

உங்க கிட்ட பேசுறதுக்கு நிறைய பேரு யோசிக்கிறாங்க என ஏடிகே நாமினேஷன் செய்யும்போது போட்டியாளர் ஒருவரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது என்பதும் இந்த ஓப்பன் நாமினேஷனில் நாமினேஷன் செய்யப்படுபவர் மீது கிரீம் தடவ படுகிறது என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம் 

இந்த நிலையில் இந்த நாமினேஷனில் ஏற்கனவே குயின்ஸி, ரக்சிதா, கதிரவன், மைனா, ஜனனி ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ள நிலையில் தனலட்சுமியை ஏடிகே நாமினேட் செய்கிறார்

அவர் நாமினேஷனுக்காக காரணம் கூறியபோது, ‘உங்க கிட்ட பேசுவதற்கு நிறைய பேர் யோசிக்கிறாங்க என்று தெரிகிறது. சில விஷயங்கள் சொல்லும்போது நீங்கள் கோபப்படுகிறீர்கள். குறிப்பாக அந்த கேப்டன் டாஸ்க் நடந்தபோது எல்லாரும் சேர்ந்து ஒருவரை கேப்டனாக தேர்வு செய்யும்போது... என ஏடிகே பேசியபோது தனலட்சுமி குறுக்கிட்டார். 

அப்போது ஏடிகே, ‘நான் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் என்று கூறியபோதும் தனலட்சுமி தொடர்ந்து குறிக்கிட்டு தன்னுடைய கருத்தை சொல்ல முன்வருகிறார். இதனை அடுத்து ஏடிகே, ‘இதனால் தான் உங்களை நான் நாமினேட் செய்கிறேன்’ என்று கூறி அவரது முகத்தில் க்ரீமை தடவுகிறார். 

இந்த நிலையில் தற்போதைய நிலையில் குயின்ஸி, ரக்சிதா, கதிரவன், மைனா, ஜனனி, தனலட்சுமி என ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்', 'பீஸ்ட்' பாணியில் ரிலீஸாகும் 'வாரிசு'. ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய திரைப்படங்கள் தமிழ் தெலுங்கு மொழிகளில் மட்டுமின்றி இந்தி டப்பிங் பதிப்பும் ஒரே நாளில் ரிலீஸ்  ஆனது என்பது தெரிந்ததே.

'பாபா' படத்திற்காக மீண்டும் ரஜினி செய்த வேலை.. கிளைமாக்ஸ் மாற்றப்படுகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

தம்பதிகளாக கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள் வைரல்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று சென்னையில் நடந்ததை அடுத்து இருவரும் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

பிடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க.. ரசிகையின் கேள்விக்கு மைனாவின் சர்ச்சை பதில்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என மைனா ரசிகை ஒருவரின் கேள்விக்கு பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் சம்பள தொகை எவ்வளவு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் அவர்களில் நேற்று வெளியேறிய ராபர்ட்