close
Choose your channels

'மாஸ்டர்', 'பீஸ்ட்' பாணியில் ரிலீஸாகும் 'வாரிசு'. ரசிகர்கள் குஷி!

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் தமிழ் தெலுங்கு மொழிகளில் மட்டுமின்றி இந்தி டப்பிங் பதிப்பும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் ‘வாரிசு’ திரைப்படமும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில், தமன் இசையில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தை இந்தி மொழியிலும் டப் செய்து ஒரே நாளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், ஹிந்தி டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் ‘வாரிசு’ திரைப்படமும் அதே பாணியில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.