close
Choose your channels

வைரலாகும் பிக்பாஸ் ஆயிஷாவின் குடும்ப புகைப்படம்!

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஒருவர் வெளியேறி கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த வாரம் மட்டும் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாக இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஆயிஷா, அவருடைய தங்கை, சகோதரர் மற்றும் அம்மா ஆகியோர் இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக அவருடைய தங்கையை பார்த்து ஆயிஷாவுக்கு இவ்வளவு அழகான தங்கையா? என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

விஜய் டிவியில் ’பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் நடித்த ஆயிஷா அதன்பின் ஜீ தமிழ் சேனலில் ’சத்யா’ என்ற தொடரில் நடித்து பிரபலமானார் என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வந்துள்ள ஆயிஷா இனி அடுத்து விஜய் டிவியின் சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.