குற்றவாளி கூண்டில் அசீம், வழக்கறிஞராக மாறி திணறடித்த விக்ரமன்.. நீதிபதி யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏடிகே இருந்தார் என்பதும் விக்ரமன் மீது சுமத்தப்பட்ட வழக்கில் விக்கிரமனுக்கு ஆதரவாக ஷிவின் வாதாடினார் என்பதும், விக்ரமனுக்கு எதிராக அசீம் வாதாடினார் என்பதும் தெரிந்ததே.

மேலும் நேற்று நீதிபதி ஏடிகே வழங்கிய தீர்ப்பில் முரண்பாடு இருந்ததை அடுத்து பிக்பாஸே தீர்ப்பு குறித்து சந்தேகம் கேட்க, நீதிபதி மீது ஷிவின் சரமாரியாக குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் அசீம் சாவியை எடுத்து வைத்தது டாஸ்க்கின் தந்திரமே தவிர ஏடிகே மீதான காழ்ப்புணர்ச்சி அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்தவர் அசீம் என்பதும் அவருக்கு ஆதரவாக ஷிவின் வாதாடப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அசீமுக்கு எதிராக விக்ரமன் வழக்கறிஞராக களமிறங்கி அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு அசீமை திணறடிக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் ராம் நீதிபதியாக உள்ளார். இன்று நடைபெறும் டாஸ்க்கில் வெற்றி பெறும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகை ஸ்ரீப்ரியாவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

20 கோடி பட்ஜெட், 400 கோடி வசூல்.. வெற்றின்னா இப்படித்தான் இருக்கணும்!

100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சில கோடிகள் மட்டுமே லாபங்கள் பெறும் படங்கள் இருக்கும் மத்தியில் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து

நான் டப்பிங் செய்யும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.. 'துணிவு' நடிகரின் அசத்தல் பதிவு

அஜித் நடித்த 'துணிவு' படம் தான் நான் டப்பிங் செய்ய முதல் தமிழ் படம் என பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து டப்பிங் செய்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். 

'உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.. எஸ்.ஜே.சூர்யாவின் 'வதந்தி' டிரைலர்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த முதல் நேரடி ஓடிடி திரைப்படமான 'வதந்தி' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'துணிவு' படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதா? அப்போ 'வாரிசு' நிலைமை?

தமிழகத்தில் சுமார் 1100 திரையரங்குகளில் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 800 திரையரங்குகளில் 'துணிவு' படத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள