close
Choose your channels

நான் டப்பிங் செய்யும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.. 'துணிவு' நடிகரின் அசத்தல் பதிவு

Wednesday, November 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ படம் தான் நான் டப்பிங் செய்ய முதல் தமிழ் படம் என பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து டப்பிங் செய்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது என்பதும் அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலர் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ’சார்பாட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் ‘துணிவு’ படத்தின் தனது கேரக்டருக்கான டப்பிங் பணியை முடித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, ‘நான் டப்பிங் செய்யும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்றும் அஜித் அவர்களுடன் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இயக்குனர் எச் வினோத் உடன் எடுத்த புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொகைன் உள்பட பலரது நடிப்பில் உருவாக்ய ‘துணிவு’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.