இந்த வார நாமினேஷன்.. 3 போட்டியாளர்கள் குறிவைக்கப்பட்டார்களா?

  • IndiaGlitz, [Monday,December 05 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் பட்டியல் வெளியாகும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படும் காட்சி இடம்பெற்று உள்ளது. இதில் போட்டியாளர்கள் முதல்கட்டமாக ஆயிஷாவை நாமினேட் செய்கின்றனர். ஆயிஷாவை மைனா, விக்ரமன், அசீம், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். ஆயிஷா எல்லை மீறி போவதாகவும் வலிமையான போட்டியாளராக இல்லை என்றும் காரணமாக கூறுகின்றனர்

இதையடுத்து ராம் நாமினேட் செய்யப்படுகிறார். அவரை ரக்சிதா, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். இதனை அடுத்து அசீமை ராம் நாமினேஷன் செய்கிறார். அமுதவாணன், விக்ரமன், கதிரவன் ஆகியோர்களும் அசீமை நாமினேட் செய்கின்றனர். அசீம் எப்போது என்ன செய்வார் என்று தெரியவில்லை என்றும் அதிகமாக கோபப்படுகிறார் என்றும் காரணங்களாக கூறப்படுகின்றன. இதனையடுத்து இந்த புரமோவில் இருந்து ஆயிஷா, ராம் மற்றும் அசீம் ஆகிய மூவர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.


 

More News

தலைமை செயலகம் நோக்கி செல்லும் இயக்குனர் அமீர்.. வைரலாகும் புகைப்படம்

 தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அமீர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு 'உயிர் தமிழுக்கு' என்ற டைட்டில்

கேப்டன் டாஸ்க்கிற்காக ஆவேசமாக மோதும் தனலட்சுமி.. என்ன நடந்தது?

 பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 56 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று 57வது நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'வணங்கான்' படத்தில் மீண்டும் திருப்பம்.. 2டி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

 சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று இயக்குநர் பாலா இந்த படத்திலிருந்து சூர்யா

இந்த வாரம் 2 எவிக்சன் ஒரு வைல்ட்கார்ட்.. சூடு பிடிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் டைட்டில் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள்

மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த