close
Choose your channels

மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அவருடைய மறைவுக்கு சுசீந்திரன், விஷ்ணுவிஷால், சூரி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பதும், அவருடைய குடும்பத்திற்கு உதவி செய்ய பலர் முன் வந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவிஷால் மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அவரது மனைவியிடம் உறுதி அளித்ததாக கூறி உள்ளார். மேலும் கடந்த ஆறு மாதங்களாக தன்னால் முடிந்த உதவிகளை வைரவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் செய்து கொண்டிருந்ததாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வைரவன் குழந்தைகளின் படிப்புச் செலவை விஷ்ணு விஷால் ஏற்றுள்ள நிலையில் மேலும் சில நடிகர்கள் வைரவன் குடும்பத்தினருக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.