பிந்துவிடம் அறை வாங்குவாரா சினேகன்?

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் நொந்து நூலாகி இருக்கும் நிலையில் இனிமேல் பிக்பாஸையே பார்க்க மாட்டேன் என்று பலர் டுவிட்டரில் கூறி வருகின்றனர். இதை புரிந்து கொண்ட சேனல் நிர்வாகம் இன்று பூ ஒன்று புயலானது போல் அமைதியாக அப்பாவியாக இருந்த பிந்துவை ஆங்காரமாக காட்டியுள்ளனர்.
சினேகன் ரொம்ப ஓவரா பண்றாரு. ஒருத்தரை கையை நீட்டி அடிக்க கூடாதுன்னு பார்க்குறேன், இல்லைன்னா அவரை அறைஞ்சிடுவேன்' என்று இன்றைய புரமோவில் கூறுகிறார் பிந்துமாதவி. பிந்துமாதவி கோபப்படும் அளவுக்கு கட்டிப்பிடி வைத்தியர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று தெரியவில்லை. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை மூடு இருந்து பார்ப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
நேற்று தான் நடிகை சுஜா வருணே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். வந்தவுடனே பிந்து-சினேகன் சண்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேயறைந்தது காணப்படுவது மேலும் ஒரு காமெடியாக உள்ளது. இரண்டு பக்கமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பம் முதல் நல்லவர் போல் நடித்துவரும் நரிக்குணம் கொண்ட சினேகனின் சாயம் வெளுக்கும் நாள் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. கமல்ஹாசன் கூட நம்பிய இவரது ஓவர் ஆக்சனுக்கு முடிவும் நெருங்கிவிட்டது.

More News

'தரமணி' இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டாரின் பாராட்டு

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து பாராட்டுக்கள், திட்டுக்கள் என இரண்டும் கலந்த விமர்சனத்தை கொடுத்தாலும், வசூலில் சாதனை செய்து வருகின்றது...

சிம்புவின் முதல் 'காதல் தேவதை' யார்? செப் 1ல் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அஜித் படத்தின் டிரைலர், விஜய் படத்தின் சிங்கிள் என பரபரப்புடன் இருக்கும் நிலையில் இந்த பரபரப்பில் தற்போது சிம்புவும் இணைந்து கொள்கிறார்...

மத்திய அரசின் அவசர சிகிச்சைக்கு நன்றி கூறிய கமல்

மருத்துவம் பயில காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் தீராமல் இருந்ததால் பலரது டாக்டர் கனவு ஏக்கமாகவே இருந்தது...

ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்: விவேகம் டிரைலர் விமர்சனம்

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த நேற்று நள்ளிரவு திடீரென இந்த படத்தின் டிரைலர் வெளியானது...

சிறுவர் சிறுமியர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் கேம்! தீர்வு என்ன?

மனித வாழ்க்கைக்கு ஆன்லைன், இண்டர்நெட் ஆகியவை எந்த அளவுக்கு உதவி செய்கிறதோ அதே அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேல் உபத்திரமும் செய்கிறது