close
Choose your channels

'தரமணி' இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டாரின் பாராட்டு

Thursday, August 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து பாராட்டுக்கள், திட்டுக்கள் என இரண்டும் கலந்த விமர்சனத்தை கொடுத்தாலும், வசூலில் சாதனை செய்து வருகின்றது. நான்கு நாள் விடுமுறை தினங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய இந்த படம் விடுமுறை தினம் முடிந்த பின்னரும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'தரமணி' படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ராம் உள்பட படக்குழுவினர்களை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

'தரமணி' ஒரு துணிச்சலான படம் என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் குறிப்பாக முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஏற்கனவே படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் படக்குழுவினர்களுக்கு ரஜினியின் பாராட்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்து சென்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.