ஓவியாவுக்கு பதிலாக புதிய நட்சத்திரம்: களைகட்டுமா பிக்பாஸ்?

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

கடந்த சில வாரங்களாக தமிழக மக்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் களையிழந்து காணப்படுகிறது. ஹீரோ மற்றும் வில்லன் இல்லாத திரைப்படம் போல ஓவியா மற்றும் ஜூலி இல்லாத பிக்பாஸ் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓவியா மற்றும் ஜூலியின் வெளியேற்றத்தை ஈடுகட்டும் வகையில் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிக்பாஸ் நிர்வாகத்தினர் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் முக்கிய நட்சத்திரம் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாம். அவர் ஆணா, பெண்ணா என்ற சஸ்பென்ஸில் உள்ள நிலையில் பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ரைசா, காயத்ரி மற்றும் பிந்துமாதவி என மூன்று பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் காயத்ரி வெளியேற வாய்ப்பு இருப்பதால் அது இரண்டாக மாறும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் புதியதாக வரும் நட்சத்திரம் யாராக இருக்கும், அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் களைகட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார்...

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.

விஷாலின் 25வது படத்தின் பூஜை! ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான செட்

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றூம் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சமந்தா-நாகசைதன்யா திருமண அழைப்பிதழ் இதுதான்

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதம் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'ஆளப்போறான் தமிழன்' பாடலின் மேலும் இரண்டு வரிகள்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோ டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது.