close
Choose your channels

சமந்தா-நாகசைதன்யா திருமண அழைப்பிதழ் இதுதான்

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதம் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் சமந்தா திருமணத்தின் அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கோவாவில் உள்ள வாகாடோர் பீச்சில் உள்ள ஒரு ஓட்டலில் அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமந்தா தற்போது விஜய்யுடன் 'மெர்சல்', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் படம், விஷாலுடன் 'இரும்புத்திரை', மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிப்பை தொடர்வார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.