close
Choose your channels

'விக்ரம்' குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிக்பாஸ் நடிகை: வீடியோ வைரல்

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படத்தில் நடித்த குழந்தையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மனதில் இடம் பிடித்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக கமல்ஹாசன் மகனான காளிதாஸ் ஜெயராமின் மகன் கேரக்டரில் தர்ஷா என்ற குட்டி பாப்பா நடித்திருந்தார். கமல் அந்த குழந்தையை கொஞ்சி மார்போடு அணைத்துக் கொள்ளும் காட்சி உருக்கமாக இருக்கும் என்பதும் அந்த குழந்தையும் எதிர்காலத்தில் பிளாக் ஸ்குவாடில் இணையும் என்று கமல் கூறும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டலை வரவழைத்த காட்சி என்பதும் மேலும் அந்த குழந்தையை காப்பாற்றுவது தான் இந்த படத்தின் மெயின் கதை என்பதும் படம் பார்த்த அனைவரும் தெரிந்ததே .

கமல்ஹாசனின் பேரனாக நடித்திருந்த குட்டிப்பாப்பா தர்ஷா, சமீபத்தில் திரையரங்கில் ’விக்ரம்’ படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ஜூலி அந்த குழந்தையை கொஞ்சிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.மேலும் அவர் அந்த பதிவில் ’என்ன அழகு மற்றும் சமத்து என்றும் செல்லக்குட்டி என்றும் அடுத்த ஸ்டார் தயார் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment