close
Choose your channels

பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இவர்? தோழி யாஷிகாவை மிஞ்சும் கிளாமர்!

Thursday, August 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் நிலையில் அவரை மிஞ்சும் வகையில் அவரது தோழியும் அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவருமே நெருங்கிய தோழிகளாக உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக யாஷிகா கலக்கலான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் ஐஸ்வர்யா தத்தா யாஷிகாவை மிஞ்சும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும், குறிப்பாக முதல் நபராக யாஷிகா இந்த புகைப்படங்களை லைக்ஸ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா தத்தா தற்போது ’கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’, ‘அலேகா’, ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘காபி வித் காதல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment