close
Choose your channels

முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. ப்ளீஸ்.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் அமீர்..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இரு மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்து வந்ததாகவும் தன்னால் முழுமையாக உதவி செய்ய முடியாததால் வேறு ஒரு சோர்ஸ் மூலம் உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அந்த சோர்ஸ் பணத்தை கொடுக்கவில்லை என்பதால் அந்த இரு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் எனவே இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விருப்பப்பட்டால் அந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுமாறு இதுகுறித்து தன்னை தொடர்பு கொண்டால் அந்த மாணவர்கள் குறித்த விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமீரின் இந்த பதிவுக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.