close
Choose your channels

திருமண கோலத்தில் திடீரென தோன்றிய பிக்பாஸ் கேப்ரில்லா.. வேற லெவல் டுவிஸ்ட் என அறிவிப்பு..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் டிவி சீரியல் நடிகையுமான கேப்ரில்லா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வேற லெவல் டுவிஸ்ட் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ’ஈரமான ரோஜாவே’. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கேப்ரில்லா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஜீவா, காவியா என்ற இரண்டு கேரக்டர்களில் திரவியம் மற்றும் கேப்ரில்லா நடித்துவரும் நிலையில் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் தம்பி காதலிக்கும் பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார் என்பதும் அதேபோல் அண்ணனுக்கு பார்த்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த சீரியலின் கதையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் திருமண காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ரில்லா பதிவு செய்துள்ளார். மேலும் மாப்பிள்ளையாக பார்த்தி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதோடு அவருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் என்பதும் அதில் அவர் செம டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவில் அவர் ‘ஈரமான ரோஜாவே’ திருமண காட்சியில் செம ட்விஸ்ட் என்றும் பதிவு செய்துள்ளார்.

கேப்ரில்லாவின் இந்த பதிவுகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கேப்ரில்லாவின் உண்மையான திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment