close
Choose your channels

வனிதா வீட்டு திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்.. இதுலயும் 'ஏ' டீம் தான் இருக்குது.. 'பி' டீமை காணும்..!

Sunday, January 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த வனிதா வீட்டு திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மாயா குரூப்பில் இருந்த சிலர் மட்டும் வருகை தந்திருந்தனர் என்பதும் தினேஷ் குரூப்பில் உள்ள ஒருவரை கூட காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அர்ச்சனா டைட்டில் பட்டம் பெற்றார். மணி இரண்டாவது இடமும் மாயா மூன்றாவது இடமும் பெற்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘ஏ’ டீம், ‘பி’ டீம் என இரு குழுவாக பிரிந்து விளையாடினர் என்பதும் இதனை கமல்ஹாசனே உறுதி செய்தார் என்பதும் தெரிந்ததே.

’ஏ’ டீமில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, அக்ஷயா, ஐசு, நிக்சன், கானா பாலா உள்ளிட்டோர் இருந்தார்கள். அதேபோல் ‘பி’டீமில் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா, கூல் சுரேஷ், பிராவோ ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பின்னரும் கூட போட்டியாளர்கள் தங்கள் குரூப்புடன் தான் புகைப்படம் எடுத்து வருகின்றனர் என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் வனிதா வீட்டு திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ’ஏ’ டீமில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர் என்பதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.