பிக்பாஸ் சனம்ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகார்.. விளக்கம் அளித்த உயரதிகாரி!

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகாருக்கு விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சனம்ஷெட்டி தனது சமூகவலைதளத்தில், ‘நான் கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த போது தன்னுடைய மற்றும் ஒரு சில பயணிகளை மட்டும் குறிப்பிட்டு அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் விமானத்தில் ஏறும்முன் பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவரின் இரண்டு பேர்களின் பைகளை மட்டும் சோதனை செய்தார் என்றும் இது குறித்து அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது குடியரசு தின விழாவை முன்னிட்டு சோதனை செய்யப்படுகிறது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சோதனை நடத்த இடத்தில் எந்த விதமான பாதுகாப்பு கருவியும் இல்லை என்றும் வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது என்றும் குறிப்பாக 190 பேர் பயணம் செய்யும் விமானத்தில் ஒரு சிலரை மட்டும் உடைகளை வைத்து மதத்தை வைத்து சோதனை செய்வது தவறாக எனக்கு பட்டது என்றும் அந்த வீடியோவில் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சோதனை செய்வது என்பது நல்ல அணுகுமுறை தான் என்றாலும் ஒரு சிலரை மட்டும் சோதனை செய்வது ஏன் என்பதை தன்னுடைய கேள்வி என்றும் மற்றவர்கள் விமானத்தில் ஆபத்தான பொருளை கொண்டு செல்ல வாய்ப்பே இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டு குறித்து விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வளவன் அவர்கள் கூறுகையில் ’நாடு முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு எச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் நடிகை சனம் செட்டி கூறுவது போல் ஒரு குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை என்றும் இருப்பினும் அவரது புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

More News

மீண்டும் இந்தியா முழுவதும் சுற்றும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு.. பிரமாண்டமான புரமோஷன் திட்டம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல்

'வாரிசு' படத்தின் வசூல் வடைகள்.. கேலி செய்த 'துணிவு' தயாரிப்பாளர்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் வசூல் தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல்கள் போலியானவை என்பதை குறிக்கும் வகையில் 'துணிவு'

சிரஞ்சீவியின் அடுத்த படமும் அஜித் படத்தின் ரீமேக்கா? 

 அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படமும் அஜித்தின் இன்னொரு வெற்றி படத்தின் ரீமேக் தான் என தகவல் வெளியாகி உள்ளன. 

நீங்க ஒரு காமெடியன் இல்லை, முழு கலைஞன்.. பிக்பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்!

நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு காமெடியானாக நினைத்து கொண்டிருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு முழு கலைஞன் என பிக் பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்

'முனிகள் வசிக்கும் தவ வனமாயின் காமன் அம்பு புகுமே'.. 'ஷாகுந்தலம்' சிங்கிள் பாடல்!

 நடிகை சமந்தா நடித்த 'யசோதா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'ஷாகுந்தலம்' வரும் பிப்ரவரி 17ஆம் தேதி