close
Choose your channels

பிக்பாஸ் சரவணன் விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு..என்ன காரணம்?

Sunday, January 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சரவணன் விக்ரம் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிப்பில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 போட்டியாளர்களின் ஒருவரான சரவணன் விக்ரம் 84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் அவரது ஒரு சில நடவடிக்கைகள் நன்றாக இருந்தாலும் பல நடவடிக்கைகள் கேலிக்கும் கிண்டலுக்கும் உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாயா அவரை கரப்பான்பூச்சி என்று கூறி அவமானப்படுத்திய போதும் மீண்டும் மீண்டும் அவருக்கே சப்போர்ட் செய்தது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் அவர் நள்ளிரவில் தன்னந்தனியாக நான் தான் டைட்டில் வின்னர் என பேசியதும் ட்ரோல் ஆனது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’'I Quit My Passion’ என்று பதிவு செய்து ’எல்லோருக்கும் நன்றி’ என்றும் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர் நடிப்பில் இருந்து விலகுகிறாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் வைத்துள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment