விஜய்யின் 'வாரிசு' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,August 30 2022]

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடைபெறுகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது லேட்டஸ்டாக பிரபல தெலுங்கு நடிகையும் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நந்தினிராய் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது நடைபெறும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாரதிராஜா இவ்வளவு சொல்லியும் கேட்காத ராதிகா: என்ன செய்தார் தெரியுமா?

பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் நிலை படிப்படியாக தேறி வருகிறது

கெட்டப் மாறும் அஜித், வெளிநாட்டுக்கு பறக்கும் படக்குழு: 'ஏகே 61' படத்தின் சூப்பர் அப்டேட்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் 'ஏகே 61'  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்

சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதல் முறையாக இணையும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

தனுஷ் பட நடிகையுடன் பிரபல கிரிக்கெட் வீரர் டேட்டிங்? வைரல் புகைப்படம்!

தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'தி லெஜண்ட்' திரைப்படம் இத்தனை கோடி லாபமா? சரவணன் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் உருவான 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.