close
Choose your channels

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதல் முறையாக இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சூர்யா தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதற்குள் நடிகர் சூர்யா ’வணங்கான்’ மற்றும் ’சூர்யா 42’ படங்களின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகயிருக்கும் ’வணங்கான்’ படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் ஆகும்.

இந்த நிலையில் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் தற்போது வெற்றிமாறன் பிசியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.