close
Choose your channels

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் நடிகை: குவியும் லைக்ஸ்கள்!

Saturday, January 23, 2021 • தமிழ் Comments

பிக் பாஸ் சீசன் 4 ஃபினாலே நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் கலந்துகொண்டார் என்பதும், அவர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு போட்டியாளரை வெளியே அழைத்துச் சென்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ஷெரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்ற போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம், மாலத்தீவு கடற்கரையில் வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படம் ஒன்று, குரங்குகளுடன் தண்ணீரில் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் புகைப்படம் ஒன்று, ஆகியவற்றை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz