சாண்டியிடம் தப்பித்த கவின், சிக்கிய ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ரொமான்ஸ் தான் அதிகமாக கவனிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விஜய் டிவியின் புரமோ வீடியோவிலும் பெரும்பாலும் கவின், லாஸ்லியா ரொமான்ஸ் தான் உள்ளது

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவின் நல்ல வேளையாக தப்பித்தார். அவருக்கு பதில் தர்ஷனும் ஷெரினும் சிக்கியுள்ளனர். இன்றைய வில்லுப்பாட்டு டாஸ்க்கில் தர்ஷன் ஷெரின் காதல் குறித்து சாண்டி பாட்டுப்பாட அதற்கு ஜோராக லாஸ்லியா, முகின், வனிதா ஆகியோர் கோரஸ் போட, ஷெரின் சிணுங்குகிறார்.

சாண்டி அசல் வில்லுப்பாட்டு கலைஞராகவே மாறியுள்ளதால் அவர் இந்த வாரம் பெஸ்ட் ஃபெர்மார்மராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இன்று முழுவதும் ஹவுஸ்மேட்ஸ்கள் ஜாலியாக இருப்பதால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

சச்சினை ஏன் எல்லோருக்கும் பிடிக்கின்றது? இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்!

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரது விளையாட்டை விமர்சனம் செய்பவர்கள் கூட அவரது மனித நேயத்தை,

'சின்னத்தம்பி' படத்தின் இரண்டாம் பாகமா 'சிக்சர்'?

பிரபு, குஷ்பு நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றிப்படம் 'சின்னத்தம்பி. இந்த படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி ஆறு மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் நோயாளியாக நடித்திருப்பார்.

லாஸ்லியாவுக்காக சேஃப்டிபின் கேட்டு கலாய் வாங்கும் கவின்!

கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோஷன்களில் கவின், லாஸ்லியா காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதனை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்த்து வந்தபோதிலும்

விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தில் 2 முன்னணி நாயகிகள்!

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக வீராங்கனைக்கு தங்கம்

பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.