close
Choose your channels

'சின்னத்தம்பி' படத்தின் இரண்டாம் பாகமா 'சிக்சர்'?

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபு, குஷ்பு நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றிப்படம் 'சின்னத்தம்பி. இந்த படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி ஆறு மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் நோயாளியாக நடித்திருப்பார். ஆறு மணிக்கு மேல் அவர் படும்பாடு தான் இந்த படத்தின் காமெடிகளில் ஹைலைட்.

இந்த நிலையில் இதே கான்செட்டில் உருவான திரைப்படம் தான் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள வைபவ் நடித்த 'சிக்சர்' திரைப்படம். இந்த படத்தில் 'சின்னத்தம்பி' கவுண்டமணியின் பேரனாக வைபவ் நடித்துள்ளார். இதனையடுத்து 'சின்னத்தம்பி' படத்தின் காமெடி போர்ஷனின் இரண்டாம் போல் இந்த சிக்சர்' உருவாக்கப்பட்டுள்ளதாக எடுத்து கொள்ளலாம். இந்த தகவலை சற்றுமுன் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ மூலம் உறுதி செய்துள்ளார்.

வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதாரவி, விஜய் டிவி புகழ் ராமர், இளவரசு, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். சாச்சி இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிஜி முத்தையா ஒளிப்பதிவில் ஜோமின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.