லாஸ்லியாவுக்காக சேஃப்டிபின் கேட்டு கலாய் வாங்கும் கவின்!

கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோஷன்களில் கவின், லாஸ்லியா காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதனை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்த்து வந்தபோதிலும் இதுவே தொடரந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கவின், லாஸ்லியாவை கலாய்த்து சாண்டி வில்லுப்பாட்டு பாடிய நிலையில் அடுத்த புரமோஷனிலும் கவினை காதலை சாண்டி கலாய்ப்பது போல் உள்ளது. 'சேஃப்டிபின் வேண்டும் என்று தர்ஷனிடம் கவின் கேட்க, சேஃப்டிபின் லாஸ்லியாவுக்குத்தானே என்று சாண்டி உள்பட அனைவரும் கலாய்க்க கவினும், லாஸ்லியாவும் வெட்கத்தில் சிரிப்பது இன்றைய புரமோவின் ஹைலைட். போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும்போதே இருவரும் ஜோடியாகத்தான் செல்வார்கள் போல் தெரிகிறது.

மேலும் இன்றைய புரமோவின் பின்னணியில் கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இடம்பெற்ற 'புதுமாப்பிள்ளைக்கு' என்ற பாடலின் பின்னணி இசை ஒலிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தில் 2 முன்னணி நாயகிகள்!

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக வீராங்கனைக்கு தங்கம்

பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கவினை கலாய்த்து வில்லுப்பாட்டு பாடும் சாண்டி குழுவினர்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் தமிழக நாட்டுப்புற கலைகள் குறித்த டாஸ்க்குகளும், அந்த கலைகளின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை தெரிவித்து

ஆர்யாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி!

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 'கஜினிகாந்த் என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு அவர் ஐந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

செப்டம்பர் முழுவதும் செம அப்டேட்: 'பிகில்' குறித்து அர்ச்சனா கல்பாதி

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.