கவின் பேச்சால் சேரன் டென்ஷன், சுதாரிப்பாக இருக்கும் லாஸ்லியா!

கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா காதல் பரபரப்பாக பிக்பாஸ் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது, கவினை தனியாக அழைத்து பேசிய சேரன், ‘இப்போதைக்கு இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். வெளியே சென்ற பின்னர் லாஸ்லியா குடும்பத்தினர்களுடன் கலந்து பேசி அதன்பின் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம். இந்த வீட்டில் இருக்கும் வரை இனிமேல் காதல் குறித்து லாஸ்லியாவிடம் பேச வேண்டாம் என்று அறிவுரை கூறினார்'. அதை கவினும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் சேரன் வீட்டை விட்டு வெளியேறிய தைரியத்தில் லாஸ்லியாவிடம் தனது காதலை உறுதி செய்யும்படி கவின் மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறார். தனக்கு ஒரு உறுதிமொழியை லாஸ்லியா தரவேண்டும் என்று கவின் அழுத்தம் கொடுக்கின்றார். இதனை சீக்ரெட் அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த சேரன், என்னிடம் இனிமேல் காதல் குறித்து பேச மாட்டேன் என்று கவின் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது லாஸ்லியாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றார். எனவே மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் கவின் கொடுத்த அழுத்தத்தை லாஸ்லியா நாகரீகமாக நிராகரித்துவிட்டார். தான் வேறொரு நாட்டில் இருந்து வந்துள்ளதால் தனது நாட்டினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் இப்போதைக்கு சொந்த பிரச்சனையை விட நான் ஜெயித்து சென்றால் எனது நாட்டிற்கு பெருமை என்பதே என் கண்முன் இருப்பதாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இதனால் கவின் அப்செட் ஆனாலும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார்.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்படும்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

'சைத்தான்' இயக்குனரின் அடுத்த படத்தில் அந்த கால ஆக்சன் ஹீரோ!

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' மற்றும் சிபிராஜ் நடித்த 'சத்யா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணராஜ் தற்போது மூன்றாவது படத்திற்கு தயாராகியுள்ளார்.

தனுஷின் அடுத்த படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பட டைட்டில்?

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்

ஜிவி பிரகாஷின் அடுத்த படம் குறித்த தகவல்

ஜிவி பிரகாஷ் நடித்த 'சிகப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஐங்கரன்', '100% காதல்', 'அடங்காதே',

மரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை!

பிரிட்டனில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து அரை மணி நேரத்துக்கு பின்னர் திடீரென உயிர் பெற்று எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது