close
Choose your channels

ஜிவி பிரகாஷின் அடுத்த படம் குறித்த தகவல்

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ‘சிகப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’ஐங்கரன்’, ‘100% காதல்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்', ‘4ஜி’, ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு அபாரமான கதையில் நடிக்கவிருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கில் ஒரு ஸ்பெஷல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தின் நாயகியாக திவ்யபாரதி என்ற மாடல் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் ஃபர்ஸ்ட்லுக்கில் தெரிய வரும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.