வனிதா கூட்டணியில் திடீர் குழப்பம்: வெளுத்து வாங்கிய ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் வனிதா தலைமையில் ஒரு கூட்டணியும், கவின் தலைமையில் ஒரு கூட்டணியும் ஏற்பட்டு இரு கூட்டணியில் உள்ளவர்களும் கடந்த சில நாட்களாக மோதி வருகின்றனர். இதில் வனிதாவின் வாக்குவாதம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிருப்தியை அளித்து வருகின்றது. மீண்டும் வனிதா எப்போது வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

வனிதாவின் மிகப்பெரிய குறையே அவர் தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது, அவ்வாறு தலையிடும்போது மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் தன் கருத்தை மட்டுமே கத்தி வலியுறுத்துவது என்பதுதான். இந்த நிலையில் ஷெரினும் தர்ஷனும் சாதாரண நட்புடன் பழகி வருவதை இருவருக்கும் ஏதோ ஒன்று இருப்பது போன்று வழக்கம்போல் வனிதா வத்திக்குச்சி வைக்கின்றார். இதனால் வனிதா கூட்டணியில் இருந்த ஷெரின் ஆவேசம் அடைகிறார். நான் வைத்துள்ள ரிலேஷன்ஷிப் குறித்து நீ யார்? என்று வெளுத்து வாங்கும் ஷெரின், எனக்கும் தர்ஷனுக்கும் லவ் இருக்கின்றது நீ எப்படி சொல்லலாம்? என எகிறுகிறார். தன்னுடைய அணியில் உள்ள ஒருவரே தனக்கு எதிராக திரும்புவது வனிதாவுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. மேலும் இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் சாக்சியும் திணறுகிறார்.

இந்த நிலையில் தர்ஷனும் ஷெரினுடன் சேர்ந்து வனிதாவை வெளுத்து வாங்க, வனிதாவின் கொட்டம் இனிவரும் நாட்களில் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த வாரமாவது வனிதாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் நாமினேட் செய்து அவரை வெளியேற்றினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி அமைதியாக செல்லும் என தெரிகிறது.

More News

விஜய்-ஸ்டாலின் சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

நடிகர் விஜய் தானுண்டு தனது திரைப்பட பணிகள் உண்டு என்று அமைதியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விஜய்யை தேவையில்லாமல் அரசியல் பக்கம் இழுத்து வருகின்றனர்

யுவன்ஷங்கர் ராஜாவின் 'அஞ்சு மணிக்கு' இன்று ரிலீஸ்!

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமின்றி பிற இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்த பாடல்களையும் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் 'ஜனகணமன' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் கொடுமைப்படுத்தினார், கமலும் கண்டிக்கவில்லை: மதுமிதா போலீஸ் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு உயிரை பலி கொடுத்து 100 உயிரை காப்பாத்துனா பாவமில்லை: 'காப்பான்' டிரைலர் 

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காப்பான்' திரைப்பத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியது.