close
Choose your channels

ஒரு உயிரை பலி கொடுத்து 100 உயிரை காப்பாத்துனா பாவமில்லை: 'காப்பான்' டிரைலர் 

Wednesday, September 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காப்பான்’ திரைப்பத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியது.

அதிரடி ஆக்சன் மற்றும் ஜாலியான கலர்ஃபுல் ஆட்டம் பாட்டம் நிறைந்திருக்கும் இந்த டிரைலரில் இருந்தே இதுவொரு பக்கா கமர்ஷியல் படம் என்று தெரிகிறது. சூர்யாவும் சுறுசுறுப்பான ஆக்சன் காட்சிகள், சாயிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ‘அயன்’ படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதே அழகுடன் சூர்யா தோற்றமளிப்பது மார்க்கண்டேயன் மகன் என்பதை நிரூபணம் செய்கிறது.

சாயிஷாவின் கவர்ச்சி, ஆர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் ஆக்சன், மோகன்லாலின் அனுபவ நடிப்பு மற்றும் வசனங்கள் அனைவரின் கவனத்தை பெறுகிறது. குறிப்பாக ஒரு உயிரை பலி கொடுத்து 100 உயிரை காப்பாற்றுவது தப்பில்லை, அது பாவமும் இல்லை’ என்ற வசனம் இந்த படத்தின் கதையை சுருக்கமாக சொல்வது போல் உள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கும் என கருதப்படுகிறது. வெடிகுண்டு காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம். மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு பக்கா மாஸ் படம் தயார் என இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.