close
Choose your channels

எனக்கு ஒரு சின்ன பிட்டு' வேணும் சார்: கமலிடம் வனிதா கோரிக்கை

Saturday, August 24, 2019 • தமிழ் Comments

ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் போட்டியாளர்களின் பஞ்சாயத்துக்கள் விசாரணை செய்யப்படும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம், வனிதா 'வாத்து' பஞ்சாயத்தை கமல் முன் கொண்டு வருகிறார். கஸ்தூரி தன்னை வாத்து என்று கூறியது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என்று வனிதா கூற, அதற்கு 'நான் வனிதாவை 'வாத்து' என்று கூறவில்லை, வாத்தை தான் வாத்து என்று கூறினேன்' என்று கஸ்தூரி விளக்கம் அளிக்கின்றார்.

இந்த நிலையில் 'எனக்கு ஒரு சின்ன பிட்டு வேணும் சார், ஒரு சின்ன மசாலா பிட்டு' என்று வனிதா கேட்கின்றார். 'வாத்து' காட்சி குறித்த குறும்படத்தை அவர் கேட்பது போல் தெரிகிறது. இன்று ஏற்கனவே கவின் - லாஸ்லியா குறும்படம் ஓடி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனிதாவின் 'பிட்டு' குறும்படத்தையும் கமல் ஒளிபரப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz