அர்ச்சனாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்: திருடனாக மாறும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் பல சுவராஸ்யமாக இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க், ’பாட்டி சொல்லை தட்டாதே’.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வருவார்கள் என்று காத்திருக்கும் பாட்டிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைத்து வருகிறது. சொத்தை பிரித்து தருகிறேன், சொத்து வேண்டும் என்றால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் என்று பாட்டி கூறுவதாகவும், சொத்துக்களுக்காக பாட்டி வீட்டுக்கு குடும்பத்தினர் வருவது போலவும் டாஸ்க்கில் உள்ளது.

மேலும் சொத்து இருக்கும் பெட்டியை பாட்டி, பூட்டி வைத்திருக்கும் நிலையில் தன்னை யார் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு தான் சொத்து என்று கூறுகிறார். இதனையடுத்து அந்த பெட்டியில் உள்ள சொத்தை பெறுவதற்காக அனைவரும் பாட்டியை மாறி மாறி நன்றாக பார்த்து வருகிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அந்த பெட்டியில் உள்ள சொத்தை திருடுவதற்கு திட்டம் போடுகிறார். இதுதான் இன்றைய டாஸ்கின் கதை என்று பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அர்ச்சனா பார்ட்டியாக மாற, பாலாஜி சொத்தை திருடும் திருடனாக மாற வீடு ஒரே கலகலப்பாக இருக்கிறது. இந்த புரமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

 5 முறை காதலைச் சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன்… மனம் திறக்கும் அமெரிக்க முதல் பெண்மணி!

தற்போது நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்லில் பெரும்பான்மை வெற்றிப் பெற்றிருக்கிறார்

என்னை பத்தி யாரு தப்பா சொன்னாலும் நம்பாதிங்க: அம்மாவிடம் ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் தீபாவளி அன்று தாங்கள் யாரை  மிஸ் செய்கிறோம் என்பது குறித்து ஒரு கடிதம் எழுத பிக்பாஸ் தெரிவித்திருந்தார்

நான் அப்படி பேசியிருக்க கூடாது: ரஜினி குறித்து ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையைப் பழிதீர்த்து முதல் கோப்பையை வெல்லுமா டெல்லி?

ஐபில் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அனுபவ வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை இளம் படையான டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. 

பழைய செருப்புக்கு நிகரானவர் ஜோ பிடன்… இப்படி வாழ்த்தி இருக்கும் ஒரு பிரபல பத்திரிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறது