close
Choose your channels

பாலாஜி எப்போது 'தல' ஆனார்: சுசியின் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி!

Wednesday, December 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கருதப்படும் போட்டியாளர்களின் பட்டியலில் பாலாஜியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஒவ்வொரு வாரமும் தான் செய்யும் தவறுகளுக்கு கமல்ஹாசனிடம் விமர்சனம் பெற்றாலும் அவருடைய தனித்தன்மையான ஆட்டம் மற்றும் ஸ்டேட்டர்ஜிக்கள் வித்தியாசமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆரி மட்டுமின்றி அர்ச்சனா குரூப்புக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் பாலாஜிக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. இந்த நிலையில் இன்று பாலாஜிக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள், இந்நாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பாலாஜி உடன் நெருக்கமாக இருந்த சுசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ’ஹாப்பி பர்த்டே தல உங்களுடைய இனிமையான கனவுகள் விரைவில் நனவாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுசியின் இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கும் வழக்கம்போல் பல்வேறு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பாக ‘தல’ என்ற பட்டத்தை தோனிக்கு கொடுத்ததற்கே விமர்சனம் செய்யும் அஜித் ரசிகர்கள், பாலாஜிக்கு கொடுத்ததை சும்மா விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.