close
Choose your channels

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

Monday, January 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது. இதன்படி ஐந்து சுற்றுகள் கொண்ட தொடரில் வெற்றி பெறும் நபர் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து பிக்பாஸ் கூறியபோது, ‘அனைத்து போட்டிகளின் இறுதியில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர், இந்த வார எவிக்சன் பிராஸசில் இருந்து விடுபடுவதோடு நேரடியாக டிக்கெட் டு ஃபினாலேவுக்கும் தகுதி பெறுவார் என அறிவிக்கப்படுகிறது

ஐந்து சுற்றுகள் கொண்ட இந்த டாஸ்க்கில் ஒரு சுற்றில் ஆரி உள்பட அடுத்தடுத்து அனைவரும் அவுட்டாக, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய இருவர் மட்டும் இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்கின்றனர். இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைவது பாலாஜியா? அல்லது ரியோவா? என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய புரமோ வீடியோவை வைத்து பார்க்கும்போது பாலாஜி இறுதிப் போட்டிக்கு நுழைய அதிக வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.