close
Choose your channels

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்: யார் யார் தெரியுமா?

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்பது அதேபோல் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.

அந்தவகையில் நேற்று நடந்த புதிய கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றி பெற்றார். ஆனால் நிரூப் தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்த இமான் அண்ணாச்சிக்கு பதிலாக தன்னையே கேப்டனாக தேர்வு செய்து கொண்டார் என்பதும் அதன் பிறகு அவர் செய்த ஆரவாரங்கள் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெற்றது. இந்த நாமினேஷனில் நேற்று 10 பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய பத்து பேர் நாமினேஷனில் உள்ள நிலையில் இவர்களில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேப்டன் நிரூப் மற்றும் வைல்ட்கார்ட் வரவுகளான அமீர் மற்றும் சஞ்சய் ஆகிய மூவர் மட்டுமே நாமினேஷன் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.