close
Choose your channels

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் பண்ணிட்டாரோ? கமலிடம் சொன்ன பிரியங்கா!

Sunday, December 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் செய்து விட்டாரோ என கமல்ஹாசனிடம் இன்றைய புரொமோ வீடியோவில் பிரியங்கா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் நடந்த டாஸ்குகளில் ஒன்று பஸ் டாஸ்க் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டாஸ்க்கில் சக போட்டியாளர் ஒருவரைக் கீழே இறக்க வேண்டும் என்பது தான் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க். இதில் ஒவ்வொருவரும் வாதம் செய்து ஒவ்வொருவராக பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டனர்.

இந்த நிலையில் இறக்கி விடப்பட்ட போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பீட்சா அனுப்பிய செய்தி தெரிந்ததும் அதிலும் குறிப்பாக வெஜிடேரியன் பீட்சா இருப்பது தெரிந்ததும் யாரும் சொல்லாமலேயே பிரியங்கா இறங்கி வந்து விட்டார். இது பெரும் காமெடி மட்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் இன்றைய புரொமோவில் பேசினார்

பிரியங்கா அப்போது, ‘எனக்கே அது அவமானமாகி விட்டது. பிக்பாஸ் என்னை கீழே இறக்க வேண்டும் என்பதற்காக பீட்சாவை அனுப்பி இருப்பார் என்று நினைக்கிறேன், அதிலும் எனக்கு வெஜ் பீட்சா ரொம்ப பிடிக்கும் என்பதால் என்னை கீழே இறக்கவே வெஜ் பீட்சா அனுப்பியிருப்பார், என்னை டைவர்ட் செய்வதற்காக அவ்வாறு செய்து இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது சார்’ என்று கமல்ஹாசனிடம் பிரியங்கா கூறும் காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment