close
Choose your channels

பிரியங்கா டார்கெட் செய்யும் போட்டியாளர்: அப்படி என்ன தான் பகையோ?

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோவில் பிரியங்கா அக்ஷராவை டார்கெக் செய்வது போன்ற காட்சி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் காணாமல் போனது யார் என்பது குறித்த கருத்துகணிப்பு எடுக்கப்படும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரோமோவில் உள்ளது. இந்த புரமோவில் காணாமல் போனவர்கள் என மதுமிதா, அபினய், இசைவாணி ஆகியோர்கள் கூறப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இசைவாணியை ராஜூ ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவருமே குறிப்பிடுகிறார்கள். நாம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கட் செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து காணாமல் போவதாக ராஜூ காரணம் கூறுகிறார்.

இந்த நிலையில் பிரியங்கா காணாமல் போனோர் குறித்து கூறும்போது அக்ஷராவை குறிப்பிடுகிறார். ஏற்கனவே ஒரு சில நேரங்களில் அக்சராவை பிரியங்கா டார்கெட் செய்துள்ள நிலையில் மீண்டும் அவரை டார்கெட் செய்வதாகவும், அப்படி என்ன இருவருக்கும் வெளியே பகையோ? என்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் கூட்டத்தில் காணாமல் போவது யார் தேர்வு செய்யப்படுவார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.