close
Choose your channels

தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் பாவனி ரெட்டி மற்றும் சின்ன பொண்ணு ஆகிய இருவரையும் டார்கெட் செய்து மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்ததாக இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி எல்லா வித உணர்ச்சியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பவர் தான் இந்த வாரம் தலைவர் பதவி ஏற்பார் என்று பிக் பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து ராஜூ ஜெயமோகன் மற்றும் இசைவாணி ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கும் நிலையில் இருவரையும் சிரிக்க வைக்க மற்ற போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இதில் ஒருபடி மேலே போன அபிஷேக், இசைவாணியை டார்ச்சர் செய்கிறார். சின்ன வயதில் இருந்து நீ பட்ட கஷ்டங்கள் போதாதா? இப்போது இந்த தலைவர் பதவிக்காக மறுபடியும் கஷ்டப்பட வேண்டுமா? என்று கூறுகிறார். அப்போது இமான் அண்ணாச்சி பர்சனல் விஷயங்களை எல்லாம் எடுக்க வேண்டாம், சிரிக்க மட்டும் வையுங்கள், என்று கூற, அதற்கு அபிஷேக் மற்றும் வருண் வாதம் செய்கின்றனர்.

இந்த புரமோ வீடியோவில் இருந்து இந்த வார தலைவராக இசைவாணி அல்லது ராஜூ ஜெயமோகன் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.