என் அளவுக்கு அவங்களுக்கு தைரியம் இல்லை: தாமரை கூறியது யாரை?

என் அளவுக்கு தைரியம் அவருக்கு இல்லை என தாமரை தனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போட்டியாளர் குறித்து கூறியதுடன் கமல்ஹாசன் ’தெளிவாக அடித்து விட்டார்’ என கமெண்ட் அடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இரண்டு இரண்டு பேர்களாக உட்காருங்கள் என கமல்ஹாசன் கூறுகிறார். அதன்பிறகு, ’எனக்கு ஏன் ஓட்டு போடவேண்டும், இவருக்கு ஏன் ஓட்டு போடக் கூடாது என்பதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் கூறுங்கள் என கமல்ஹாசன் கூறுகிறார்.

இதனையடுத்து சிபியுடன் உட்கார்ந்து இருக்கும் நிரூப் கூறும்போது, ‘என்னை பொருத்தவரை இவர் இன்னும் கேமுக்குள்ளேயே வரவில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறுகிறார். அதேபோல் அமீருடன் உட்கார்ந்து இருக்கும் வருண், ‘இவருக்கு காலில் பட்ட அடியே அவருடைய கவனக்குறைவால் தான் என்று நான் சொல்வேன் என்று கூறுகிறார்.

அதே போல் பாவனியுடன் உட்கார்ந்து இருக்கும் தாமரை, ‘என் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார். அதேபோல் ராஜூவுடன் உட்கார்ந்து இருக்கும் அக்சரா கூறியபோது, ‘ராஜூ அண்ணாவுக்கு ஏன் ஓட்டு போட வேண்டாம் என சொல்வதற்கு என்னிடம் காரணம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் ராஜூ வின் பண்ணினால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எனக்கு ஓட்டு கண்டிப்பாக போடுங்கள்’ என்று கூறுகிறார்.

இதே போல் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

அஜித்துக்கு விபத்து ஏற்பட்டது எதனால்? இயக்குனர் எச் வினோத் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்ட காட்சி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ்: வைரல் புகைப்படம்!

நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது சத்யராஜை வரவேற்று சூப்பர் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில்

சமந்தாவின் பான் - இந்தியா திரைப்படத்தின் முக்கிய தகவல்!

தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் பான் - இந்தியா திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் 'யசோதா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள

விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்: காரணம் இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: சைகை மூலம் எவிக்சனை சொல்லும் கமல்!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் சைகை மூலம் கூறும் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.