close
Choose your channels

கடினமான போட்டியாளர்கள் யார் யார்? கமலிடம் தெரிவித்த பார்வையாளர்கள்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கி வரும் நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்களில் கடினமான போட்டியாளர்கள் யார் என்பதை குறித்து கமல்ஹாசன் பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

அப்போது பார்வையாளர்களில் ஒருவர் ராஜூ கடினமான போட்டியாளர் என்று கூறுகிறார். இன்னொருவர் வருண், சிபி, ராஜூ ஆகிய ஆண் போட்டியாளர்கள் எல்லோருமே கடினமான போட்டியாளர்களாக உள்ளனர் என்று கூறினார். இன்னொருவர் அபிஷேக் இல்லாத பிரியங்கா கடினமான போட்டியாளர் என்று கூறும்போது அபிஷேக்கை பிரியங்கா கட்டிப் பிடித்துக் கொள்கிறார். அப்போது கமல்ஹாசன் அபிஷேக் வந்து ஒரு நாள் தான் ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும் இந்த சீசனில் பழிவாங்கும் போக்கு மற்றும் மற்றவரை ஆக்கிரமிக்கும் போக்கு அதிகம் போட்டியாளர்கள் மத்தியில் இருப்பதாக இன்னொருவர் கூறுகிறார். மொத்தத்தில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய இரண்டாவது அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.