close
Choose your channels

உள்ளே ஜெயிக்கிறது விளையாடற மாதிரி தெரியல.. பிக்பாஸ் கமல் சொல்வது யாரை?

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். குறிப்பாக கடந்த வாரம் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரியாகிய நிலையில், இந்த நிகழ்ச்சி மேலும் விறுவிறுப்பாகியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் தோன்றி, ‘நிறைய கனவுகளுடன் உள்ளே 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் போனார்கள். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தீர்கள்.

உள்ள ஜெயிக்கிறதுக்காக விளையாடுறத விட தோக்காமல் விளையாடனும் அப்படிங்கிறது தான் போட்டியாளர்கள் நடந்துக்கிற மாதிரி எனக்கு தோணுது. இந்த ஆட்டம் சுவாரசியமா இருக்கா என்ற கமல்ஹாசன் கேள்வியுடன் புரமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சில வித்தியாசமான கேள்விகளை கமல்ஹாசன் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.