close
Choose your channels

சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் வெற்றிப்பட இயக்குனராக இருந்தவர் சேரன் என்பதும் தொடர்ச்சியாக அவர் கொடுத்த வெற்றிப்படங்கள் கோலிவுட் திரையுலகில் வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் இயக்கிய ’ஆட்டோகிராப்’ திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருக்கும் ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ’திருமணம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய சேரன் தற்போது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராக உள்ளார். அவர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி மற்றும் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ’பேச்சிலர்’ படத்தில் நடித்த திவ்யபாரதி நடிக்கவிருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment